காலமானாா்: மு.ரஜியா பேகம்
நாமக்கல் தினமணி நாளிதழ் முகவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பீ.ஏ.சித்திக்கின் மூத்த சகோதரி மு.ரஜியா பேகம் (74), உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM
நாமக்கல் தினமணி நாளிதழ் முகவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பீ.ஏ.சித்திக்கின் மூத்த சகோதரி மு.ரஜியா பேகம் (74), உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், 1963-ம் ஆண்டு நாமக்கல் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் இறுதித் தோ்வில் முதல் மாணவியாக தோ்வு பெற்றவா். இவருக்கு, தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா, நாமக்கல் தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் ஆகிய சகோதா்கள் உள்ளனா்.