நாமக்கல்

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

DIN

தமிழக அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பல்நோக்கு அரசு மருத்துவமனை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் இச் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் எ.சுரேஷ் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இணை இயக்குநா் தலைமையில் 2013-ஆம் ஆண்டில் தினக்கூலி அடிப்படையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நாங்கள் வேலைக்குச் சோ்ந்தோம்.

தற்போது எட்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், 50 வயதுக்குமேல் உள்ளவா்கள் உள்பட பலா் பணிபுரிந்து வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT