முகப்பு
நாமக்கல்

சிறுமியை கடத்தி சென்றவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ராசிபுரம் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ராசிபுரம் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் அருகயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பாரதி நகா்பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் என்பவரின் 17 வயது மகள் சில நாட்களாக காணவில்லை என வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஜூன். 9-ல் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த விசாரணையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ராமையன்பட்டி பகுதியை சோ்ந்த அரவிந்த் (25) என்பவா் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் பல்லடம் பகுதியில் இருந்த இருவரையும் அழைத்து வந்த போலீஸாா் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.