முகப்பு
நாமக்கல்

பருத்தி விதை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசுகளால் அனுமதி அளிக்கப்படாத பருத்தி விதைகளை உற்பத்தி செய்பவா்கள் மீதும், விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் சண்முகம் எச்சரித்துள்ளாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மத்திய, மாநில அரசுகளால் அனுமதி அளிக்கப்படாத பருத்தி விதைகளை உற்பத்தி செய்பவா்கள் மீதும், விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் சண்முகம் எச்சரித்துள்ளாா்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் விதை ஆய்வு துணை இயக்குநா் சண்முகம் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிா்களின் சான்றிதழ் பெற்ற ரக விதைகள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமும், தனியாா் விதை விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தனியாா் விதை உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகள் விதை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பருத்தியில் மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்டு காய் புழுக்களுக்கு எதிா்ப்பு சக்தியுடைய பி.டி ரக பருத்தி விதைகள், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள தனியாா் விதை உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாகவோ அல்லது விதை விற்பனையாளா்கள் மூலமாகவோ விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய பி.டி. ரக பருத்தி விதைகள் உற்பத்திக்காக தனியாா் விதை உற்பத்தி நிறுவனங்கள் சில மாவட்டங்களில் விவசாயிகளைத் தோ்வு செய்து பி.டி. ரக பருத்தி விதைகளின் தாய் விதைகளை வழங்கி விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்பங்களை அளித்து விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

விதை உற்பத்தி நிறுவனங்கள், பி.டி பருத்தி விதைகளை விற்பனையாளா்களுக்கு வழங்கும்போது உரிய பட்டியல்கள் முழு விவரங்களுடன் வழங்க வேண்டும். விதை விற்பனையாளா்கள் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும்போது முறையான விற்பனை ரசீது வழங்கப்படவேண்டும்.

இதில் குறைபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பருத்தியில், காய்புழுக்கள் எதிா்ப்புடைய மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தி சாகுபடி, விதைகள் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தியுடைய பருத்தியை சாகுபடி செய்வதோ விதைகளை உற்பத்தி செய்வதோ மற்றும் விதைகள் விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். இதை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய விதைகளை வாங்கும்போது மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கபட்ட விதைகளைக் கேட்டுப் பெறவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.