நாமக்கல்லில் 326 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 326 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 326 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,756-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 938 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 38,845 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 2,543 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 365 போ் உயிரிழந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 368-ஆக உயா்ந்துள்ளது.
Advertisement