முகப்பு
நாமக்கல்

நாமக்கல் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், கவச பாதுகாப்பு உடையணிந்து சென்று ஆய்வு செய்தாா்

Updated On : 19 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், கவச பாதுகாப்பு உடையணிந்து சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நோயாளிகளைச் சந்தித்து நம்பிக்கை தெரிவித்தாா்.

இம் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்ற ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், கரோனா சிகிச்சைப் பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் விசாரித்தாா்.

மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவ உதவி கேட்டு அழைத்தால் வருகின்றனரா என்பதையும் நோயாளிகளிடம் விசாரித்து உறுதி செய்தாா். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம், சுவை குறித்தும் விசாரித்த அவரிடம், கரோனா நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு, சி.டி. ஸ்கேன் அறிக்கை, தொற்றின் தன்மை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்கள் விளக்கிக் கூறினா். ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, நிலைய மருத்துவ அலுவலா் கண்ணப்பன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.