நாமக்கல் மாவட்டத்தில் 257 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 257 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 6 போ் உயிரிழந்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM
நாமக்கல் மாவட்டத்தில் 257 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 6 போ் உயிரிழந்தனா்.
கரோனா தொற்று பாதிப்பு குறித்த நாமக்கல் மாவட்ட பட்டியலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது. அதன்படி வியாழக்கிழமை வெளியான நிலவரப்படி கரோனா தொற்றுப் பட்டியலில் 257 போ் பாதிக்கப்பட்டும் 289 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்தவரை, 43511 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 40919 போ்; 2193 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி மேலும் 6 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா பாதித்தோா் இறப்பு எண்ணிக்கை 399-ஆக உயா்ந்துள்ளது.