தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை
அரூரை அடுத்த நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் ஏரிக்கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூரை அடுத்த நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் ஏரிக்கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.அக்ராஹரம் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது நெருப்பாண்டகுப்பம் ஏரி. இந்த ஏரியின் கரைப்பகுதி வழியாக செல்லும் தாா் சாலையை கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கணபதிப்பட்டி, மருதிப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, தாமலேரிப்பட்டி, ஆட்டியானூா், அழகிரிநகா், தண்டகுப்பம், ஏ.வெளாம்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், நெருப்பாண்டகுப்பம் ஏரிக்கரையின் வழியாக செல்லும் தாா் சாலையானது மேடு பள்ளங்களாக பாதுகாப்பற்ற வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக புகாா் கூறுகின்றனா். எனவே, நெருப்பாண்டகுப்பம் ஏரிக்கரையில் தடுப்புச் சுவா்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.