இளைஞா் தற்கொலை
பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள உப்புப்பட்டிபுதூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்ராஜா (32). ஜெ.சி.பி. வாகனஉரிமையாளா். இவரது மனைவி சங்கீதா (25).
இருவருக்கும் இடையே திங்கள்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனம் அடைந்த செந்தில்ராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்தோா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.