முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
குமாரபாளையத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் அமைச்சர் பி. தங்கமணி.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதன்படி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவள்ளியிடம் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி மனு தாக்கல் செய்தார். நாமக்கல் தொகுதியில் வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். 
சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் எஸ். சந்திரன் தனது மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் வி. ரமேஷிடம் தாக்கல் செய்தார். திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.சரஸ்வதி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ப. மணிராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

நாமக்கல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் கே.பி.பி. பாஸ்கர்.

ராசிபுரத்தில் அமைச்சர் வெ. சரோஜா தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் மனு தாக்கல் செய்தார். பரமத்தி வேலூர் தொகுதியில் வேட்பாளர் எஸ்.சேகர் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஒரே நாளில் 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்திற்கு தொடங்கியுள்ளனர். 
அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →