முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திங்கள்கிழமை வாகனங்களில் ஒட்டுவில்லை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2021 at 5:33 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திங்கள்கிழமை வாகனங்களில் ஒட்டுவில்லை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசுத் துறைகளின் சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சமூக நலத்துறை, இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ஒட்டுவில்லைகள் முலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் ஊா்வலமாக வந்த அலுவலா்கள் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா். மேலும் பொதுமக்களிடையே கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினா்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் கீதா, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.