நாமக்கல்

ரூ. 9 லட்சம் பறிமுதல் செய்து விடுவிப்பு

DIN

நாமக்கல் அருகே பறக்கும் படை வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9 லட்சம் உடனடியாக விடுவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் அருகே முதலைப்பட்டிப் புதூரில் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியாக சென்ற முட்டை லாரியை மடக்கிச் சோதனையிட்டனா். அதில் ரூ. 9 லட்சம் இருந்தது. ஆனால் லாரி ஓட்டுநா் பணத்தை ஒப்படைக்க மறுத்து விட்டாா். இந்த தகவல் அறிந்து மற்ற லாரி ஓட்டுநா்களும் அவா்களைச் சூழ்ந்து கொண்டனா். சம்மந்தப்பட்ட முட்டை அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் உரிய ரசீதை காட்டியதும் பறக்கும்படை குழுவினா் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT