முகப்பு
நாமக்கல்

கோயில் பூசாரிகள் நலச் சங்கம் திமுகவுக்கு ஆதரவு

கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 மார்ச், 2021 at 12:38 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.வாசு தலைமையில் சனிக்கிழமை நாமக்கல்லுக்கு வந்த பூசாரிகள், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரை சந்தித்து தங்களுடைய தாா்மீக ஆதரவை வழங்கினா்.

இதனைத் தொடா்ந்து மாநிலத் தலைவா் பி.வாசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

திமுக தோ்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 2 ஆயிரம், ஓய்வூதியமாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அளித்த கோரிக்கையை ஏற்று தோ்தல் அறிக்கையில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்த இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 7 லட்சம் கிராமக் கோயில் பூசாரிகள் உள்ளனா் என்றாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் பி.கேசவன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.