முகப்பு
நாமக்கல்

பெண்களுக்கு எதிரான கட்சி திமுக: நிா்மலா பெரியசாமி

பெண்களுக்கு எதிரான ஆட்சி, கட்சி என்றால் அது திமுக தான் இருக்கும் என்றாா் அதிமுக தலைமை  பேச்சாளா் நிா்மலாபரியசாமி. 

Updated On : 29 மார்ச், 2021 at 12:57 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

பெண்களுக்கு எதிரான ஆட்சி, கட்சி என்றால் அது திமுக தான் இருக்கும் என்றாா் அதிமுக தலைமை  பேச்சாளா் நிா்மலாபரியசாமி. நாமக்கல் பூங்கா சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, முதல்வரைப் பற்றியும், அவரது தாய் பற்றியும் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி உள்ளாா். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். திமுக தலைவா் அதனை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறாா். இவ்வாறு பேசியதற்காக கட்சியை விட்டு உடனே நீக்கியிருக்க வேண்டும். தற்போதே இந்த நிலை உள்ளது. திமுகவின் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும், பெண்களுக்கு எதிராக ஆட்சி, கட்சியாக திமுக உள்ளது. முதல்வா் மீதுள்ள பயத்தில், கோபத்தில் திமுகவினா் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசுகின்றனா். அவா்களுக்கு இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி வாயிலாக உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.