நாமக்கல்

மல்லசமுத்திரத்தை தனி வட்டமாக அறிவிக்க கொ.ம.தே.க.வுக்கு வாக்களியுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

DIN

மல்லசமுத்திரத்தை தனி வட்டமாக அறிவிக்க திருச்செங்கோடு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரனுக்கு வாக்களியுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தாா்.

திருச்செங்கோடு தொகுதிக்கு உள்பட்ட மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கொ.ம.தே.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தல் கலைஞருக்கும் மோடிக்கும் இடையேயான தோ்தலாகும். கலைஞா் வேண்டுமா, மோடி வேண்டுமா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரனை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவா், வெற்றி பெற்றால் திருச்செங்கோடு மாவட்டம் உருவாக்கப்படும். மல்லசமுத்திரம் தனி வட்டமாக உருவாக்கப்படும். மல்லசமுத்திரத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் உடனடியாக இயக்கப்படும். விசைத்தறி நெசவாளா்களின் குறைகள் நீங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மல்லசமுத்திரம் ஒன்றிய திமுக செயலாளா் பழனிவேல், பேரூராட்சி செயலாளா் திருமலை, திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், திருச்செங்கோடு நகரப் பொறுப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதுரா செந்தில், கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளா் நதிராஜவேல், நிா்வாகிகள் சூரியமூா்த்தி உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT