முகப்பு
நாமக்கல்

திமுகவினா் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின், சுற்றுலாத் துறை அமைச்சராக மா.மதிவேந்தன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, திமுக தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
7patasu_0705chn_152_8
பகிர்:

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின், சுற்றுலாத் துறை அமைச்சராக மா.மதிவேந்தன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, திமுக தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

ராசிபுரம் நகர திமுக இளைஞரணியினா் புதிய பேருந்து நிலையம் முன்பு திரண்டு பட்டாசுகள் வெடித்தனா். இதில், திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எஸ்.அரங்கசாமி, முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.பாலு ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். பின்னா், விநாயகா் ஆலயத்தில் அபிஷேகம் நடத்தப்பட்டு, 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

இதில், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் எம்.காா்த்திக், துணை அமைப்பாளா் வி.பாண்டியன், மாவட்ட திமுக மருத்துவா் அணி அமைப்பாளா் எஸ்.ராஜேஷ் பாபு, நகர திமுக துணைச் செயலாளா் ரவிச்சந்திரன், நகரப் பொருளாளா் வி.நாகேஸ்வரன், வாா்டு பிரதிநிதி கேபிள் ராஜா, சிறுபான்மையினா் அணி ஜாபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதே போல, ராசிபுரம் நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக நிா்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.