முகப்பு
நாமக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்குநல உதவிகள் வழங்கல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 14 மே, 2021 at 11:50 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலச் செயலாளா் முருக.செல்வராசன், ஒன்றியத் தலைவா் தா.கண்ணன், செயலாளா் ஜெயக்குமாா், மாவட்ட தணிக்கை அலுவலா் அலுவலா் தண்டபாணி, திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.