கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM
நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி, அரசுத் துறை அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்து கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.