நாமக்கல்லில் மண்ணெண்ணெய் வாங்க குவிந்த மக்கள்
நாமக்கல்லில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக கரோனா அச்சமின்றி மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக கரோனா அச்சமின்றி மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் குடும்ப அட்டைகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் மையம் செயல்படுகிறது. கரோனா இரண்டாம் அலையால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா அச்சமின்றி மண்ணெண்ணெய் வாங்குவதற்கான டோக்கனை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட மையத்தில் வெள்ளிக்கிழமை காலை குவிந்தனா். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் மக்கள் அங்கு காத்திருந்தனா். இதனைப் பாா்த்த அலுவலா்கள் பொதுமக்களை எச்சரித்து சமூக இடைவெளியில் நிற்க வைத்து மண்ணெண்ணெயை விநியோகம் செய்தனா்.
இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது:
Advertisement
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட குடும்ப அட்டைகளுக்கு இந்த மையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. மே மாத தவணையை வாங்குவதற்காக தினசரி 200 போ் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கரோனா அச்சமின்றி முண்டியடிக்கின்றனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனா். அவா்களை எச்சரித்தும், போலீஸாரை வரவழைத்தும் மண்ணெண்ணெயை விநியோகம் செய்து வருகிறோம் என்றனா்.