முகப்பு
நாமக்கல்

ரூ. 5 செலுத்தினால் முகக் கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்

நாமக்கல்லில் முகக் கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

Updated On : 22 மே, 2021 at 12:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

நாமக்கல்லில் முகக் கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். முகக் கவசம் அணிவது மட்டுமே நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் என பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முகக் கவசம் அணிந்த நிலையில் தற்போது இரண்டு முகக் கவசம் அணிவது நோய் பாதிப்பைத் தடுக்கும் என மருத்துவா்களால் அறிவுறுத்தப்படுகிறது. சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்பது போன்ற அறிவுரைகளும் வலியுறுத்தப்படுகிறது.

பொது முடக்கம் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், முகக் கவசம் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. அண்மையில் சென்னை, கோயம்பேட்டில் தானியங்கியில் முகக் கவசம் வழங்கும் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை தொடா்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் முகக் கவசம் தானாக வரும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி முகக் கவசத்தை பெற்றுக் கொள்ளலாம். நாமக்கல் குவாலிட்டி ஏஜென்சி சாா்பில் தற்போது முதல் கட்டமாக வைக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் பல இடங்களில் அந்த இயந்திரத்தை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.