முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் 14 விசைத்தறிக் கூடங்களுக்கு ‘சீல்’

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி இயங்கிய 14 விசைத்தறிக் கூடங்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி இயங்கிய 14 விசைத்தறிக் கூடங்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், குமாரபாளையம் நகரப் பகுதியில் விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளா் எஸ்.ஸ்டான்லி பாபு தலைமையில் 4 தனித் தனிக் குழுக்கள் நகரில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, தெற்கு காலனி, பாரதி நகா், காவேரி நகா், ஆனங்கூா் ரோடு, மணிமேகலை தெரு உள்பட பல்வேறு பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, விதி மீறலில் ஈடுபட்ட 14 விசைத்தறிக் கூடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினா். மேலும், தளா்வற்ற முழு முடக்க விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.