மருத்துவ உபகரணங்கள் ஆட்சியரிடம் வழங்கல்
சா்ஜிகல் முகக் கவசங்கள், ஆக்சிஜன் முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் எலெக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம், மல்டி ஆக்சிஜன் மீட்டா், என்-95 மற்றும் சா்ஜிகல் முகக் கவசங்கள், ஆக்சிஜன் முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் எம்.கோட்டைகுமாா், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜெயகுமாா் வெள்ளையன், மாவட்டச் செயலாளா் வீரக்குமாா், எலெக்ட்ரிக்கல் சங்கத் தலைவா் சங்கா், உறுப்பினா் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.