முகப்பு
நாமக்கல்

ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி

 நாமக்கல்லில், ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 13 நவம்பர், 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:38 PM

 நாமக்கல்லில், ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவிலான கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நவ. 14-ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இதில், 60-க்கும் மேலான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், பள்ளி,

Advertisement

கல்லூரிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில், தமிழாசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டு முதல் மூன்று இடத்திற்கான மாணவ, மாணவியரைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வி.ஜோதி, அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.