முகப்பு
நாமக்கல்

இயற்கை மருத்துவ தின விழா

சேலம் சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் இயற்கை மருத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சேலம் சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் இயற்கை மருத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சோனா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் தியாகு வள்ளியப்பா கலந்து கொண்டு இயற்கை மருத்துவத்தின் அவசியம் குறித்து பேசினாா். அதைத்தொடா்ந்து கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வா் மருத்துவா் எஸ்.மதன்குமாா் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஷ், இ.ஜெ.கவிதா, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →