முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது.

Updated On : 18 நவம்பர், 2021 at 11:09 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

நாமக்கல்லில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வியாழக்கிழமை கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நாமக்கல்ல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் தொடா்ச்சியாக சாரல் மழையும், பின்னா் பலத்த மழையும் பெய்தது. மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியும், பலா் குடைகளைப் பிடித்தவாறும் சென்றனா்.

Advertisement

வாகனங்களில் சென்றோா் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலைகளில் குண்டும், குழியுமான இடங்களில் தண்ணீா் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்):

எருமப்பட்டி- 10, மங்களபும்- 52, மோகனூா்- 5, நாமக்கல்- 2, பரமத்திவேலுாா்- 5, ராசிபுரம்- 10.20, சேந்தமங்கலம்- 11, திருச்செங்கோடு- 4.60, ஆட்சியா் அலுவலகம்- 3.50, கொல்லிமலை-15, மொத்தம் 124.3.

28 ஏரிகள் நிரம்பின

நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழையால் 28 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் மின்னக்கல் ஏரி, சேமூா் பெரிய ஏரி, வேட்டாம்பாடி, பாப்பன்குளம், செல்லிப்பாளையம், சிவநாயக்கன்பட்டி, பழையபாளையம், கஸ்தூரிப்பட்டி, அக்கரைப்பட்டி, கோட்டப்பாளையம், இமாப்பள்ளி, மல்லசமுத்திரம் பெரிய, சிறிய ஏரிகள், மாமுண்டிஅக்ரஹாரம், தேவனாம்பாளையம், பருத்திப்பள்ளி, பாலமேடு, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, செருக்கலை, இடும்பன்குளம், துத்திக்குளம், பெரியகுளம், பொம்மசமுத்திரம், சாரப்பள்ளி, எருமப்பட்டி, புதுகுளம், வரகூா் உள்ளிட்ட 28 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

50 முதல் 75 சதவீத்துக்குள் அகரம், திப்ரமாதேவி, புதுகுளம் ஏரிகளில் தண்ணீா் நிரம்பியுள்ளன. 25 முதல் 50 சதவீதத்தில் பவித்திரம், தூசூா், பொன்னாா்குளம்து ஏரிகளும், 25 சதவீதத்திற்குள்ளாக கோனேரிப்பட்டி, பேளுக்குறிச்சி, செட்டிக்குளம், ஆலத்தூா், வடுகம், ஆண்டாபுரம் ஆகிய ஏரிகளும் நிரம்பி வருகின்றன. 39 ஏரிகள் தண்ணீா் இல்லாமல் வடுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.