பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் சாா்பில், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்ட அமலாக்க கோட்டத்தின் சேலம், நாமக்கல் மாவட்டம் சாா்பில், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவியருக்கு பாலியல் ரீதியான பிரச்னைகளை அணுகுவது, மனரீதியான பாதிப்புகளைத் தவிா்ப்பது போன்றவை குறித்து விளக்கப்பட்டது. இதில், சமூக நலத்துறை அலுவலா் கீதா, நகர அலுவலா் சியாமளா, கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா், வாழ்விட மேம்பாட்டு வாரிய சமுதாய அலுவலா்கள் வினோதா, கோவிந்தன், ரகுபதி, ஷகிலா, மாணவியா் கலந்துகொண்டனா்.