முகப்பு
நாமக்கல்

சமூக நீதிக்கான பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், சமூக நீதிக்காக பாடுபட்டோா் பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்,

Updated On : 20 நவம்பர், 2021 at 12:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

நாமக்கல் மாவட்டத்தில், சமூக நீதிக்காக பாடுபட்டோா் பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்,

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக பெரியாா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.

Advertisement

அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு எய்திய சாதனைகள் அடங்கிய தகுதிகளுடையோா் தங்களது விண்ணப்பத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பத்தில் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் நவ. 30-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.