அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!
சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் குறித்து...
சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததால், பர்பிள் கேப் விருதை வென்று அசத்தியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 194/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 184/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 18ஆவது ஓவரிலும் 20ஆவது ஓவரிலும் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.
Advertisement
Advertisement
நடப்பு சீசனில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ள அன்ஷுல் கம்போஜ் பர்பிள் கேப் விருதை எதிரணியின் வீரர் ஹென்ரிச் க்ளாசனிடம் பெற்றார்.
பந்துவீச்சாளர்களே இல்லை எனக் கூறிவந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தூணாக அன்ஷுல் கம்போஜ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பற்றி:
1. அன்ஷுல் கம்போஜ் - 13 விக்கெட்டுகள் (சிஎஸ்கே)
2. பிரசித் கிருஷ்ணா - 11 விக்கெட்டுகள் (குஜராத்)
3. புவனேஷ்வர் குமார் - 10 விக்கெட்டுகள் (ஆர்சிபி)
4. பிரின்ஸ் யாதவ் - 9 விக்கெட்டுகள் (லக்னௌ)
5. ரவி பிஸ்னோய் - 9 விக்கெட்டுகள் (ராஜஸ்தான்)
Csk bowler Anshul Kamboj gets a purple cap in ipl 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.