முகப்பு
கிரிக்கெட்

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!

சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 12:20 pm IST
சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி. - ஏபி
பகிர்:

சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் தற்போது பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 194/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 184/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 முக்கியமான விக்கெட்டுகள் (சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே) எடுத்து அசத்தினார்.

Advertisement

Advertisement

தொடக்கத்தில் பேட்டிங்கில் மட்டுமே மிளிர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி, இந்த சீசனில் மிடில் ஓவர்களில் மட்டுமில்லாமல் பவர்பிளேவிலும் பந்துவீசி அசத்தி வருகிறார். இவரை கிரிக்கெட் ரசிகர்கள், “பாராட்டுப் பெறாத நாயகன்” (Unsung hero) எனக் கூறி வருகிறார்கள்.

கொல்கத்தாவுக்கு எதிராக - 39 (24) ரன்கள் & 2 ஓவர்களில் 2/17 விக்கெட்டுகள் - சன்ரைசர்ஸ் வெற்றி

ரஜஸ்தானுக்கு எதிராக - 28 (13) ரன்கள் & 2 ஓவர்களில் 0/19 - சன்ரைசர்ஸ் வெற்றி

சிஎஸ்கேவுக்கு எதிராக - 12 (8) ரன்கள், 4 ஓவர்களில் 2/31 விக்கெட்டுகள் - சன்ரைசர்ஸ் வெற்றி

summary

Nitish Kumar Reddy The unsung hero of Sunrisers Hyderabad in IPL 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.