FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐபிஎல் 2027: டிரேடிங் மூலம் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த நடராஜன்!

டிரேடிங் மூலம் தில்லி கேபிடல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அவரது பழைய அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாதுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

7 வினாடிகள் முன்பு
நடராஜன் - படம் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
பகிர்:

டிரேடிங் மூலம் தில்லி கேபிடல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அவரது பழைய அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாதுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் ஐபிஎல் தொடரில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சீசனில் அவரை தில்லி கேபிடல்ஸ் அணி ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இரண்டு சீசன்களாக தில்லி கேபிடல்ஸில் இடம்பெற்ற நடராஜன், 2025 சீசனில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. ஐபிஎல் 2026 சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய அவர், வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முந்தைய டிரேடிங்கில் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் மீண்டும் இணைந்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஸீசன் அன்சாரி தில்லி கேபிடல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 55 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும்.

இதுவரை 73 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 72 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Delhi Capitals fast bowler Natarajan has rejoined his former team, Sunrisers Hyderabad, through a trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments