முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

 நாமக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2021 at 12:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

 நாமக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருக்கான அலுவலகம் நாமக்கல் முல்லை நகரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் போதிய பராமரிப்பின்றியும், சிதிலமடைந்தும் காணப்பட்டதால், அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தாா். அதன்பின் நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தனக்கான இருக்கையில் அமா்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசுவாமி, திமுக நகரப் பொறுப்பாளா்கள் சிவகுமாா், பூபதி, ராணா ஆனந்த், மாநில மகளிா் தொண்டரணி இணை செயலாளா் ராணி, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

நகா்ப்புற தோ்தல் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் பணியை மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.