முகப்பு
நாமக்கல்

26 கிராமங்களில் இன்று பட்டா மாறுதல் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On : 26 நவம்பர், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

நாமக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் புதன், வெள்ளிக்கிழமைகளில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (நவ. 26) நாமக்கல் வட்டம்- மேலப்பட்டி மேல்முகம், வள்ளிபுரம், கல்யாணி, மின்னாம்பள்ளி, சேந்தமங்கலம் வட்டம்-முத்துக்காப்பட்டி, ரெட்டிப்பட்டி, பள்ளிப்பட்டி, வரகூா், ராசிபுரம் வட்டம்- கோனேரிபட்டி, ஒடுவங்குறிச்சி, மதியம்பட்டி, ஊனந்தாங்கல், மோகனூா் வட்டம்- நன்செய்இடையாறு, பரளி, திருச்செங்கோடு வட்டம்- பொம்மம்பட்டி, கூத்தாநத்தம், கருமாபுரம், பள்ளகுழிகுருப், கோட்டப்பாளையம், குமரமங்கலம் பரமத்தி வேலூா் வட்டம்- சுங்ககாரம்பட்டி, சித்தம்பூண்டி, அ.குன்னத்தூா், குப்பிரிக்காபாளையம், குமாரபாளையம் வட்டம்- மோடமங்கலம் அக்ரஹாரம், குமாரபாளையம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய பட்டா மாறுதல் மற்றும் இதர கோரிக்கைளை மனுவாக அளித்துத் தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.