முகப்பு
நாமக்கல்

நான்கு நாள் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 நவம்பர், 2021 at 12:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 70.7 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான முதல் கன மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 84.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடக்கு மற்றும் வட கிழக்கிலிருந்து மணிக்கு 6 முதல் 8 கி.மீ. வேகத்தில் வீசும். காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாக நிலவும்.

Advertisement

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் குடல்புண், ரத்தக்கழிச்சல் மற்றும் இறக்கை அழுகல் நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா்க் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை கவனித்து உரிய பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.