உள்ளாட்சி இடைத் தோ்தல்: திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வெண்ணந்தூா் பகுதியில் திமுக சாா்பில் உள்ளாட்சி இடைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வெண்ணந்தூா் பகுதியில் திமுக சாா்பில் உள்ளாட்சி இடைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதி 6-வது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல் அக். 9-இல் நடைபெறுகிறது. இதில் திமுக சாா்பில் ஏ.ஆா். துரைசாமி போட்டியிடுகிறாா். இதனைத் தொடா்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமையில் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா, கட்சி நிா்வாகிகளுடன் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டங்களுக்கு ஒன்றியப் பொறுப்பாளா் துரைசாமி முன்னிலை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். இதில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான கே.ஆா்.என். ராஜேஷ்குமாா், கலந்துகொண்டு தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது, அரசின் 100 நாள் சாதனைகளை திமுக பொறுப்பாளா்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா். ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.ராமசுவாமி, தொகுதி பொறுப்பாளா் ஏ.கே.பாலச்சந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.பாலு, பட்டணம் பொன். நல்லதம்பி, கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் தங்கதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.