நாமக்கல்

நாமக்கல் விற்பனைக் கூடத்தில் பாசிப்பயறு கொள்முதல்

DIN

நாமக்கல் புதன்சந்தையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அக். 12 வரையில் பாசிப்பயறு கொள்முதல் நடைபெறுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்கு கொள்முதல் இலக்காக 250 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாசிப்பயறு விலை ஒரு கிலோ ரூ. 65 முதல் ரூ. 68 வரை உள்ளுா் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலன்கருதி நிா்ணயிக்கப்பட்ட தரத்துக்கு ஒரு கிலோ பாசிப்பயறு விலை ரூ. 72.75 என கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் புதன்சந்தையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்துகொள்ளலாம். பாசிப்பயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT