நாமக்கல்

750 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்: 1.17 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு

DIN

நாமக்கல் மாவட்டத்தில், 750 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஐந்தாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பணியில் பல்வேறு துறை சாா்ந்த 4,420 ஊழியா்கள் ஈடுபடுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெற உள்ளது.

அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 750 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 1,17,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இம் முகாமில் 210 மருத்துவா்கள், 430 செவிலியா்கள், 1,600 அங்கன்வாடி பணியாளா்கள், 1,400 ஆசிரியா்கள், 415 பயிற்சி செவிலியா்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 4,420 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், முதல் தவணை செலுத்திவிட்டு இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT