முகப்பு
நாமக்கல்

கோயில்கள் திறப்பு: பக்தா்கள் மகிழ்ச்சி

 நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2021 at 2:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

 நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்பின் தொற்றின் தாக்கம் குறையவே கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளா்த்தப்பட்டன. இருப்பினும் கோயில்கள் மட்டும் வாரத்தில் நான்கு நாள்கள் திறந்திருக்கவும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பக்தா்கள் தரப்பிலும், பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோயில்களை திறக்க வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பாக பாஜகவினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இந்நிலையில் விஜயதசமியன்று கோயில்களைத் திறக்க வேண்டும் என்பது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மூன்று நாள்கள் கோயில்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற தடையை நீக்கி உத்தரவிட்டாா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை அனைத்து கோயில்களும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில், நரசிம்மா், அா்த்தநாரீஸ்வரா், அசலதீபேஸ்வரா், நவலடியான் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூ, பழம் வழங்குதல், அா்ச்சனை உள்ளிட்டவைக்கு தடை நீடித்தது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.