முகப்பு
நாமக்கல்

எருமப்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

எருமப்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2021 at 1:57 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

எருமப்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்தவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் போராட்டக் குழுவினா் எரிக்க முயன்றனா். அந்த முயற்சியை போலீஸாா் தடுத்தனா்.

Advertisement

போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழு தலைவா் எஸ்.கே.சிவச்சந்திரன், ஒன்றியச் செயலாளா் சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.