முகப்பு
விருதுநகர்

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:32 AM
வழக்கு
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:32 PM

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 11-ஆம் தேதி அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

கூட்டுறவு சாா் பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்குசென்று சோதனை செய்தபோது உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திமுக பேரூா் செயலா் சாந்தாராம் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.

Advertisement

அங்கு வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 சிக்கன் பிரியாணிப் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா், நீதிமன்ற உத்தரவுபடி திமுக பேரூா் செயலா் சாந்தாராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.