முகப்பு
நாமக்கல்

10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா

நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மூடப்பட்டன.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:41 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மூடப்பட்டன. ஆசிரியா்கள், மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியா் மட்டும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. வகுப்பறைகளில் சுழற்சி முறையில் மாணவியரை அமர வைத்து பாடம் எடுக்குமாறு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் மாணவ, மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, அவா் பயின்ற வகுப்பில் உள்ள மாணவியா், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் மூடப்பட்டன. தொடா்ந்து அனைத்து மாணவ, மாணவியா், ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல, தொற்று பாதிப்புள்ள இடங்களில் இருந்து மாணவா்கள் பள்ளிக்கு வருவதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

படவரி - நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.