முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.11) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 3:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.11) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

நாமக்ககல் மாவட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூா் வட்ட நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் வரும் சனிக்கிழமை (செப். 11ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் முக்கிய நோக்கம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும். சமரச முறையிலும் முடித்து மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதாகும். மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக் குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.

Advertisement

இந்த நீதிமன்றத்தில் காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி கடன்கள். கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள். மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்ப பிரச்னை கள் தொடா்பான வழக்குகள், தொழிலாளா் நலம் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னை கள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களில் மேற்கண்ட வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் உடனடியாக தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி சமரச தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.