உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 11 போ் மனுத் தாக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் புதன்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது.
நாமக்கல் மற்றும் நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், நாமகிரிப்பேட்டை, பரமத்தி மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்கிளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 வேட்பு மனுக்கள் என மொத்தம் 7 வேட்பு மனுக்கள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன. வியாழக்கிழமை 4 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதுவரை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 வேட்பு மனுக்கள் என மொத்தம் 11 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement