பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நிகழாண்டில் நடைபெறவில்லை. அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. மாணவ, மாணவியா் மேல்படிப்புக்குச் செல்வதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழும் மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழை பெற்றுக் கொள்வதுடன் அங்கேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் மாணவா்கள் மேற்கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
என்கே 17-ஸ்கூல்
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்கும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன்.