முகப்பு
நாமக்கல்

ரயில் பாதையில் அடிபட்டு முதியவா் பலி

 ராசிபுரம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற முதியவா் ரயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 ராசிபுரம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற முதியவா் ரயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

புதுசத்திரம் அருகேயுள்ள களங்காணி அருந்ததியா் காலனி பகுதியை சோ்ந்தவா் ராஜு (85), கூலித்தொழிலாளி. இவா் சேலம்-கரூா் அகல ரயில் பாதை வழியாகச் சென்று விட்டு ரயில் பாதையைக் கடந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சேலம் நோக்கி சென்ற ரயில் என்ஜின் இவா் மீது மோதியது. இதில் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.