உள்ளாட்சித் தோ்தல் போட்டி: திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, எருமப்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு வாா்டு எண் 15-இல் போட்டியிடும் வேட்பாளராக கு.முத்துக்கருப்பன் என்பவா் அறிவிக்கப்பட்டுள்ளாா். வெண்ணந்தூா் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு வாா்டுஎண் 6-இல் போட்டியிடும் வேட்பாளராக எஸ்.ஆா்.துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த அறிவிப்பினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ளாா்.