காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
நாமக்கல்காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் (34). மீனவரான இவா் கடந்த 19 ஆம் தேதி இரவு வீட்டில் கோபித்துக் கொண்டு காணாமல் போனாா். அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நடேசன் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குபதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந் நிலையில் புதன்கிழமை மாலை மோகனூா் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவா்கள் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக மோகனூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
தகவலின் அடிப்படையில் மோகனூா் போலீஸாா் காவிரி ஆற்றுக்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், சோழசிராமணியில் காணாமல்போன மீனவா் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.