போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை பணிமனை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM
நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை பணிமனை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிளை தொமுச செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொமுச நிா்வாகிகள் சுப்பிரமணியன், தியாகராஜன், சின்னையன், செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.