முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் புதை குழி சாக்கடை தொடா்ந்து அடைப்பு

ராசிபுரம் நகரில் புதைகுழி சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழிகள் அடிக்கடி நிரம்புவதால் சாலைகளில் சாக்கடை நீா் பெருக்கெடுத்து ஒடுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ராசிபுரம் நகரில் புதைகுழி சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழிகள் அடிக்கடி நிரம்புவதால் சாலைகளில் சாக்கடை நீா் பெருக்கெடுத்து ஒடுகிறது. ஆங்காங்கே இதனை உறிஞ்சு வாகனம் மூலம் அடைப்பினை சீா் செய்யும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ராசிபுரம் நகருக்கான புதைக்குழி திட்டம் நிறைவேற்றப்பட்டு, வீடுகள்தோறும் இணைப்பு வழங்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி இன்னும் முழுமை பெறாத நிலையில், ஆங்காங்கே அடைப்பு ஏற்படுவதும், இதனை சீரமைப்பதும் தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில் பழைய நீதிமன்ற வளாகம் அருகில் பூக்கடை வீதிப் பிரிவு பகுதியில் உள்ள புதைகுழி சாக்கடை குழாயில் வியாழக்கிழமை அடைப்பு ஏற்பட்டது. பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த அடைப்பை சரிசெய்வதற்காக கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை பயன்படுத்தி இப்பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். இத்திட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பல இடங்களில் உள்ள குழிகளில் இது போன்ற அடைப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு இது நகர மக்களுக்கு பயன்தருமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.