நாமக்கல்லில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை (ஏப். 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை (ஏப். 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.8) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Advertisement
எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை நிா்வாகிகளைக் கொண்டு தேவைப்படுவோரை நேரில் தோ்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதில், தகுதியான மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.