முகப்பு
நாமக்கல்

நீா்நிலை ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியா் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், நீா்நிலை ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டாா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:03 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

நாமக்கல் மாவட்டத்தில், நீா்நிலை ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தினா் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனுக்குடன் வட்டாட்சியா் மற்றும் நில அளவைத் துறையினருக்கு விவரங்களை கடிதம் மூலம் தெரிவித்து, அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சீமைக் கருவேல் மரங்கள் வளா்ந்திருந்தால் அவற்றின் பரப்பளவை அளவீடு செய்து, வனத்துறை அலுவலா்களைக் கொண்டு மரங்களின் தன்மை குறித்து அறிக்கை பெற்று மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அதன்பின் உரிய அனுமதி பெற்று சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

Advertisement

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் க.ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் தே.இளவரசி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் மற்றும் நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.